2023 ஆசிய கோப்பைக்கான தனது இந்திய அணியை ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார்..

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு போட்டி ஒருநாள் கிரிக்கெட் வடிவில் விளையாடப்படும். 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. 7 முறை சாம்பியனான இந்தியா 2023 ஆசிய கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை செப்டம்பர் 2 ஆம் தேதி சந்திக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட அணிகள்  ஆசிய கோப்பை 2023க்கான தங்களது அணியை அறிவித்துள்ளது. எனினும் இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாளை இந்திய அணி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆசிய கோப்பைக்கான தனது 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.

சஞ்சுவுக்கும், ஐயருக்கும் இடம் கொடுக்கப்படவில்லை :

ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் இந்த அணியை அறிவித்தார். இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சனை சேர்க்கவில்லை. ஒருநாள் போட்டிகளில் ஹர்பஜன் அவர்கள் இருவருக்கும் பதிலாக சமீபத்தில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான திலக் வர்மாவை சேர்த்துள்ளார். சூர்யகுமார் யாதவின் மோசமான பார்மிலும் மிடில் ஆர்டரில் இஷான் கிஷானுக்குப் பதிலாக இடம் பிடித்தார்.

கேஎல் ராகுல் அணியில் இடம்பிடித்துள்ளார் :

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் கே.எல்.ராகுலுக்கு அணியில் இடம் கொடுத்துள்ளார். இதுதவிர ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாகவும், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்பஜன் சிங் தேர்வு செய்த 2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்.