தமிழ் சினிமாவில் ராட்சசன் மற்றும் அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அம்மு அபிராமி. இவர் சமீபத்தில் வெளியான கண்ணகி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் படம் தொடர்பான பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அம்மு அபிராமி, பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பிற்காக வெளியே செல்லும்போது சரியான பாத்ரூம் வசதி கூட இல்லாமல் அவதிப்படுகிறோம். பாத்ரூம் போகவும் உடை மாற்றவும் சிரமமாக உள்ளது. கேட்டாள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ள இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.