ராஜஸ்தான், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஜார்கண்ட் மகாதேவ் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், கிழிந்த ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வந்தால், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பேண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலின் புனிதம் குறித்த உணர்வின்றி  ஒருசிலர் ஆடை அணிந்து வருகிறார்கள். இது குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு பக்தர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.