
உணவு சாப்பிடுவதன் மூலமாகவே பெரும்பாலும் வைட்டமின்களின் தேவை பூர்த்தி செய்யப்படும். உடலுக்கு தேவையான நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கியம். இதுவரை மனிதர்களுக்கு தேவையான 13 ஊட்டச்சத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக வைட்டமின்கள் உள்ளது. இந்த காலகட்டத்தில் வைட்டமின் குறைபாடு தான் பல்வேறு நோய்களுக்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டு மாத்திரை மற்றும் மருந்து வடிவங்களில் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக வைட்டமின்களை செயற்கையாக எடுத்துக் கொள்வது உடல் நலனில் பாதிப்புகளை ஏற்படுத்தும். கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனையாடுத்து இரும்பு, துத்தநாகம் ஆகிய நுண்ணூட்ட சத்துக்கள் செரிமான கோளாறு, குமட்டல், வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவதாக தெரிகிறது. வைட்டமின் சி, டி போன்றவற்றை அதிகமாக சாப்பிடும்போது சிறுநீரகத்தில் கற்களை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
சமூக ஊடகங்களில் பார்த்து நிபுணர்கள் அல்லாதவர்களிடம் ஆலோசனை கேட்டு வைட்டமின்களை சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும். ஏனென்றால் அந்த பொருட்கள் எதிர் விளைவை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. நீண்ட காலத்திற்கு கடுமையான உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அதிகப்படியான வைட்டமின்களை உட்கொள்வது என்பது விஷமுள்ள தேனை பருகுவது போன்றது என அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.