தமிழக அரசு வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவு பதிவுத்தாளர் மற்றும் மாற்றுத்திறனாளி பதிவு தாரர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகின்றது. இதற்கான விண்ணப்பம் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு தாரர் கல்வி தகுதியை இந்த அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும்.

உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுபவர் தமிழகத்திலேயே பள்ளி கல்லூரி கல்வியை முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் ஊதியம் பெறும் எந்த பணி மற்றும் சுய வேலையில் இருக்கக் கூடாது. விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 29ஆம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம்.