மத்திய அரசானது மக்களுக்கு பயன்படும் விதமாக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பிஎம்இஜிபி) செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் மத்திய அரசு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கி வருகிறது.

மத்திய அரசிடமிருந்து 35 சதவீதம் மானியம் கிடைக்கிறது. https://kviconline.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து PMEGP போர்ட்டலில் நுழைந்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.