உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு மென்பொருள் பொறியாளராக அஸ்மா கான் என்ற 44 வயது பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி நூருல்லா ஹைதர் (55) என்ற கணவரும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் பொறியியல் பட்டதாரிகள். ஆனால் மனைவி வேலைக்கு சென்ற நிலையில் கணவனுக்கு வேலை கிடைக்காததால் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தன் மனைவி வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருப்பதாக ஹைதருக்கு சந்தேகம் இருந்ததால் அடிக்கடி அவருடன் தகராறு செய்துள்ளார்.

அவர் இந்த சம்பவத்தால் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சுத்தியலால் தன் மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்தார். பின்னர் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்று காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார். அவர் கொலை செய்த பிறகு தன்னுடைய குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு செல்போன் மூலம் நடந்த விவரங்களை கூறிவிட்டு பின்னர் அவரே போலீசில் சரணடைந்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.