தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது பிளம்பர் மற்றும் கொத்தனார் உள்ளிட்ட சேவைகளை பெற UWSA (Unorganised workers service App) என்ற அமைப்புசாரா தொழிலாளர் சேவை செயலி தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை சோதனை அடிப்படையில் முதலில் மூன்று மாவட்டங்களில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் ஓட்டுனர்கள், கொத்தனார் மற்றும் தச்சு வேலை மற்றும் சமையல் போன்றவற்றின் சேவைகளை பெற முடியும் என அரசு தெரிவித்துள்ளது.