வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை  சோதனை நடைபெற்ற போது எந்தவித ஆவணங்களும் சிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். இதேபோன்று அவருடைய மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதே போன்று திமுக கட்சியின் நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் சோதனை நடைபெற்ற போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் ‌2 நாட்களாக சோதனை நடைபெற்றது.

கிட்டத்தட்ட 44 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில் நிறைவடைந்துவிட்டது. இந்த சோதனையின் போது கல்லூரியில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத 2.5 கோடி பணம் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் எந்தவிதமான ஆவணங்களும் சிக்க வில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறிய நிலையில் நேற்று அவர் அவசரமாக டெல்லிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.