தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவ்வப்போது அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்த நிலை இப்படியே நீடித்தால் மீண்டும் ஊரடங்கு வந்து விடுமோ என்று மக்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆனால் அதை தவிர்க்க நாம் சில வழிமுறைகளை மேற்கொண்டாலே போதும்.

அதாவது, மக்கள் முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கிக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்கள் என்று இல்லாமல் வெளியே செல்லும் அனைத்து இடங்களிலும் கட்டாயமாக மாஸ் அணிந்து கொள்வது நல்லது. கோடை காலம் வந்துவிட்டதால் எளிதாக உஷ்ணம் அதிகரிக்கும். எனவே உணவுகளை சரியாக தேர்வு செய்து உட்கொள்ள வேண்டும். உடல் சோர்வாக இருந்தாலோ அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது அவசியம். அரசு சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேபோல மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து கொள்வது முக்கியமானதாகும்.