
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு வருகின்ற திங்கட்கிழமை அதாவது ஜூன் 17 வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய 20000 பயணிகள் முன்பதிவு செய்துள்ள காரணத்தால் திங்கட்கிழமை வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.