தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய்யின் 69 ஆவது படத்தை பிரபல இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், பிரியா மணி, கௌதம் வாசுதேவன், மமீதா பைஜூ  உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

படத்தின் செகண்ட் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினத்தை முன்னிடடு வெளியாகி வரவேற்பை பெற்று வந்தது. இந்த படம் அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைகளத்தில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.