உலக கோப்பை தோல்விக்கு பிறகு ரோஹித் ஷர்மா  தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அனைத்து லீக் போட்டிகளிலும், அரையிறுதியிலும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி மறக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தியது, ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றதால் இந்திய வீரர்களின் இதயங்கள் நொறுங்கியது. அத்துடன் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களும் ஆழ்ந்த சோகமடைந்தனர். இப்போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த தோல்விக்கு பிறகு இந்திய வீரர்கள் நொந்து போனார்கள். களத்திலேயே ரோகித் சர்மா, முகமது சிராஜ் கண்களில் கண்ணீர். பல வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிர்ந்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் அந்த தோல்விக்குப் பிறகு தற்போது ரோஹித் சர்மா முதன்முறையாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது..

ரோஹித் சர்மா பதிவு :

ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் காணப்படுகிறார். இடம் எங்கோ வெளிநாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. புகைப்படத்தைப் பார்த்தால், அவர் குடும்பத்துடன் வெளிநாட்டில் விடுமுறையில் இருக்கிறார் என்று யூகிக்க முடிகிறது. ரோஹித் ஷர்மா மற்றும் அணியின் மூத்த வீரர்களின் பிஸியான அட்டவணை காரணமாக உலகக் கோப்பைக்குப் பிறகு அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் அதிக ரன்கள் எடுத்தார் :

ரோஹித் ஷர்மா 2023 உலகக் கோப்பையில் பந்துவீச்சாளர்களை தனது பேட்டால் வெளுத்து வாங்கினார். இந்த உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் ரோஹித். இந்த சீசனில் விராட் கோலி அதிகபட்சமாக 765 ரன்கள் எடுத்தார். ரோஹித் 11 போட்டிகளில் 54.27 சராசரி மற்றும் 125.95 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 597 ரன்கள் எடுத்துள்ளார். இதன்போது அவரது பேட்டில் இருந்து 66 பவுண்டரிகள் மற்றும் 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ரோஹித் 3 அரை சதம் மற்றும் 1 சதம் அடித்துள்ளார். இந்த சீசனில் கேப்டன் மற்றும் வீரராக பல பெரிய சாதனைகளை ரோஹித் முறியடித்துள்ளார். இதில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையும் அடங்கும்.

இந்தியாவால் மீண்டும் கோப்பையை வெல்ல முடியவில்லை :

இந்திய அணி 2011 முதல் 3 உலகக் கோப்பைகளில் விளையாடி கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்திய அணி கடைசியாக 2013-ல் ஐசிசி கோப்பையை வென்றது, அப்போது அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பிறகு ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை. இப்போது அணியின் பார்வை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மீதுதான் உள்ளது. இந்தப் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.