தமிழகத்திலிருந்து வெளிநாடு சென்ற பணியாற்றும்போது எதிர்பாராத விதமாக ஊழியர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இப்படியான சூழலில் அவர்களின் குடும்பத்திற்கு உதவும் விதமாக திருமண மற்றும் கல்விக்கான உதவித்தொகை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வருவாய் குறைந்த பிரிவை சேர்ந்த தமிழர் வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றும் போது உயிரிழந்தால் அவரின் குடும்பத்தில் மகன் மற்றும் மகள்களுக்கு திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாயும் கல்வி உதவித் தொகையாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் தமிழர் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவர்களுக்கு மேல் இந்த உதவி தொகை வழங்கப்பட மாட்டாது எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.