
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் வணங்கான். இந்த படம் பலதரப்பட்ட விமர்சனங்களுடன் வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்னிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தது. அப்போது பாலாவிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை கேட்டனர்.
அதில் ஒரு கேள்வியாக கதாநாயகனை மாற்றுத்திறனாளியாக காட்டுவதற்கு காரணம் என்ன என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பாலா “பேசிப்பேசி புரிய வைக்க வேண்டிய இந்த காலத்தில் பேசாமலும் புரிய வைக்கலாம் என்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி தான் இது” என கூறியுள்ளார்.