தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள பத்திக்கிச்சு என்ற பாடலை பட குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இதுவரை மூன்று மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.