
ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் மணிகண்டன். இவர் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார். இந்நிலையில் மணிகண்டன் நடிப்பில் சமீபத்தில் குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்கில் வெளியானது. நடுத்தர குடும்பத் தலைவன் படும் கஷ்டங்களை நகைச்சுவையாக இப்படம் எடுத்துக்காட்டி இருந்தது.
இந்த படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜி5 நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.