சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் அவருடைய ஸ்கோர் 41, 20, 15, 28 தான் எடுத்தார். இதனையடுத்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசி இருந்தார். அதாவது  “ரோகித் சர்மா மற்ற வீரர்களிடையே ஒரு கேப்டனாக என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பது முக்கியம். எவ்வளவு ரன்கள் எடுக்கிறார் என்பது முக்கியமில்லை என்று கூறியிருந்தார். அதை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தற்போது பல  கேள்விகளை முன் வைத்துள்ளார்.

20-35 ரன்களை  மட்டுமே எடுத்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறாரா ரோஹித். 25 ஓவர்கள் வரை நின்றால் இப்போது ஏற்படுத்தும் தாக்கத்தை விட பெரிய தாக்கத்தை சகவீரர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நீங்கள் ஒரு பேட்ஸ்மேன் ஆக 20 முதல் 30 ரன்கள் மட்டுமே எடுத்து விட்டு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? நிச்சயமாக இருக்க மாட்டீர்கள். அதைத்தான் நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன். அதனால் அணியில் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.