
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ மூலம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். அந்த வீடியோவில், அவர் கருப்பு உள்ளாடையுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. உடல் தகுதி மற்றும் ஃபிட்னஸுக்காக ரசிகர்களிடம் புகழ்பெற்ற டைகரின் இந்த புதிய ஸ்டைல், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வீடியோவுடன், “தொழில்நுட்பம் இல்லை, ஆனால் நிறைய வாழ்க்கை” என்ற பதிவு இணைத்திருந்த டைகருடன், நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவும் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளில் தோன்றினர். ஆனால், இந்த வீடியோவின் உடைத் தேர்வு பலருக்கு ஏற்க இயலாததாக இருந்தது. “உங்களுக்கு உடைகள் அலர்ஜியா?” மற்றும் “சாடி பிரீமியர் லீக்” போன்ற பல நெட்டிசன் கருத்துகள் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram
இதேவேளை, சிலர் டைகரின் தைரியத்தை பாராட்டியும் கருத்து தெரிவித்துள்ளனர். சினிமா ரீதியாக, டைகர் ஷெராஃப் அடுத்ததாக ‘பாகி 4’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் 2025 செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சோனம் பஜ்வா ஹீரோயினாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.