அமெரிக்காவைச் சேர்ந்த Fire Fly Aerospace என்ற  நிறுவனம் ப்ளூ கோஸ்ட் என்ற தனது லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியுள்ளது. 10 பேலோடுகளுடன் சென்றுள்ள ப்ளூ கோஸ்ட் லேண்டர் இரண்டு வாரங்கள் ஆய்வில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளூ கோஸ்ட் நிலவை அழகாக படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் வணிக நிறுவனம் என நாசா அறிவித்துள்ளது.