நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய நிலையில் தற்போது மே 18 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி அதனை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் சீமானை விமர்சித்து பேசியதாவது, வெட்கமே இல்லையா என்ற வார்த்தையை சீமானுக்காக தான் எழுதி வைக்க வேண்டும். திராவிடம் என்று கூறினால் கோபத்தில் வெடிக்க கூடிய சீமான் சங்கி என்று கூறினால் புன்னகையுடன் ஒரு விளக்கம் கொடுக்கிறார்.

உங்கள் முகத்தை நீங்களே வெளிப்படுத்தியதற்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது அயோக்கியத்தனமாக இல்லையா. ஈழத்துக்காக நீங்கள் எதுவுமே செய்யாமல், சிங்களத்துடன் கைகோர்த்து நிற்கக்கூடிய சங்கிகளை நண்பன் என்று சொல்கிறீர்கள். இவரை முதலில் வீழ்த்துவதுதான் தமிழ் தேசியத்தின் முக்கிய பணி. பச்சை துரோகி சீமான்.

உங்களுக்கு எதிராக எங்கள் படை நிற்கும். திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்றால் சீமான் போன்றவர்களை நீக்கினால் தான் முடியும். எங்களுக்கு தேவை ‌ திமுகவுக்கு பதில் மாற்று. ஆனால் அது நிச்சயம் சீமான் கிடையாது. சீமானுக்கு முதுகெலும்பும் கிடையாது துணிச்சலும் கிடையாது. சினிமா படமும் எடுக்க தெரியல அரசியலும் செய்ய தெரியல. வரலாறும் தெரியல புரட்சி செய்யவும் தெரியல.

கோழைகளுக்கு எதுக்கு அரசியல் கட்சி. தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்திற்கு ஆபத்து ஏற்பட்டதால் தமிழ் தேசிய கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஓட்டு அரசியலுக்குள் தமிழ் தேசியம் என்பதை சீமான் நிறுத்தி வைத்துள்ளார். இதனால் இனிமேலும் பொறுக்க முடியாது என்ற காரணத்தினால் தமிழ் தேசியத்தை நாங்கள் அறிவித்துள்ளோம். மேலும் சீமானுக்கு தமிழ் தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறினார். மேலும் சீமானுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தற்போது ரஜினியிடம் போய் நிற்கிறார் என்றும் கூறினார்.