தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தை எச். வினோத் இயக்குகிறார். இந்த படத்துடன் சினிமாவை விட்டு விலகும் விஜய் அரசியலில் முழு நேர கவனம் செலுத்த உள்ளார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடும்  நிலையில் கண்டிப்பாக திராவிட கட்சிகளுக்கு சவாலாக அமைவார் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய் திராவிடமும் தேசியமும் இரு கண்கள் என்று அறிவித்துள்ள நிலையில், திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவின்போது திமுக மற்றும் பாஜகவை கிழித்தெடுத்தார். இந்நிலையில் நடிகர் விஜய் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு தற்போது அவரை வைத்து எடிட் செய்து தமிழக வெற்றி கழகத்தினர் வைரலாக்கி வருகிறார்கள். அந்த வீடியோவில் வீரதீர சூரனுக்கு எல்லாம் வியர்த்து போகும் ‌ உன்னை கண்டால் என்ற ஜில்லா படத்தில் இடம்பெற்ற பாடல் உள்ளது. இந்த வீடியோவில் முதலில் பிரதமர் மோடி, சீமான், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் வரும்நிலையில் அடுத்ததாக தளபதி வருகிறார். இந்த வீடியோவை தளபதி ரசிகர்களும் தமிழக வெற்றிக்கழகத்தினரும் வைரலாக்கி வருகிறார்கள்.