பொதுவாகவே சிலர் அடிக்கடி கடைக்கு செல்வதற்கு சிரமப்பட்டு பல பொருள்களையும் ஒட்டுமொத்தமாக வாங்கி பத்திரப்படுத்திக் கொள்வார்கள். அதன்படி அளவுக்கு அதிகமான முட்டைகளை வாங்கி அப்படியே சமையலறையில் வைத்து விடுவர். இது எந்தவிதமான பதப்படுத்தலும் இல்லாமல் இருப்பதால் சீக்கிரம் வீணாகிவிடும். அப்படி முட்டை சீக்கிரம் வீணாகாமல் இருக்க எப்படி களஞ்சியப்படுத்தி வைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

முட்டை கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க குளிரூட்டியில் அதனை வைக்க வேண்டும். குளிர்ச்சியாக இருக்கும்போது நுண்ணங்கிகள் தொழிற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.

முட்டையை வாங்கும்போது சால்மோனெல்லா என்ற நோய்க்கான தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். தரச் சான்று இல்லாத எந்த முட்டையையும் அதிகமாக வாங்க கூடாது.

குளிரூட்டியிலிருந்து முட்டையை வெளியில் எடுத்த பிறகு உடனே சமைக்க கூடாது. அரை மணி நேரம் கழித்து தான் சமைக்க வேண்டும்.

முட்டையை ஈரமில்லாத இடங்களில் தான் பாதுகாக்க வேண்டும்.