நடிகர் ராஷ்மிகா மந்தனா திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தற்போது  அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.  இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான சிக்கந்தர் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை அடுத்து தனுஷுக்கு ஜோடியாக குபேரா படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் நடித்த பேட்டி ஒன்றில் தான் குழந்தை பருவத்தில் இருந்தபோது தன்னுடைய பெற்றோர் கஷ்டத்தால் வறுமையில்  வாடியது குறித்து பேசியுள்ளார்.

அதாவது, “இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடு மாற வேண்டி இருக்கும் .வாடகை கூட கட்ட முடியாது. வாழ்வதற்கு ஒரு வீடு தேடி அவர்கள் பட்ட கஷ்டம் எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு ஒரு பொம்மை வாங்கி தர கூட காசு இருக்காது. அவர்கள் கஷ்டத்தை  புரிந்து கொண்டு நானும் எதுவும் கேட்க மாட்டேன். அப்படி வளர்ந்ததால் தான் பணத்தின் அருமை எனக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் இப்போது பார்த்து பார்த்து செலவு செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.