தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராத்திரி கொட்டகுடத்தில் உள்ள நேரு பஸ்தி என்ற பகுதியில் மின்வாரிய எலக்ட்ரீசியன் ராஜு என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய வீட்டின் சுவரில் உள்ள ஓட்டையில் பாம்பு குட்டி ஒன்று தென்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பாம்பு பிடிக்கும் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாம்பு பிடிக்கும் குழுவினர் அவருடைய வீட்டிற்கு விரைந்து அந்த சுவரில் உள்ள ஓட்டையில் பார்த்தபோது நிறைய பாம்புகள் தென்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஒரு பெரிய நாகப்பாம்பு உடன் அதன் 32 குட்டிகளை பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்தனர். அதன் பிறகு அதனை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.