மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புதிதாக ஒருவர் துணை பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய பெயர் ராம் ஸ்வரூப் குஷ்வாஹா. இவரை தற்போது இளம் பெண் ஒருவர் செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த பெண் கூறும்போது, எனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர் ஒரு இல்லத்திற்கு வரவழைத்தார். அந்தப் பெண்ணுக்கு நீண்ட நாட்களாக அவர் வேலை வாங்கி தருவதாக உறுதி கொடுத்திருந்ததால் அந்த பெண்ணும் நம்மி வீட்டிற்கு சென்றார்.

அப்போது அந்த ஊழியர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த பெண் கோபத்தில் அவரை செருப்பால் அடித்துவிட்டார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் அந்த ஊழியர் ஒரு பெண் இரு நபர்களுடன் வந்து தன்னை அடித்ததாகவும் அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தனக்கு உடம்பு சரி இல்லை அதனால் போய்விடுங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காத நிலையில் அவர் புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உத்தரவு கொடுத்துள்ளனர்.