மும்பை: பிக்பாஸ் போன்ற வடிவில் உருவாக்கப்பட்ட உல்லு செயலியில் வெளியாகும் ‘வீட்டுக் காவல்’ (House Arrest) என்ற ரியாலிட்டி ஷோவில், சமீபத்தில் வெளியான வீடியோக் கிளிப்புகள் காரணமாக சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பாளர்கள் ஆடைகளை கழற்றும் வகையான செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. அதாவது பெண்கள் வரிசையாக நிகழ்ச்சியில் அமர்ந்து கொண்டே தங்களுடைய உள்ளாடைகளை மட்டும் தனியாக கழட்டுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளது.

இதற்கு சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, இது போன்ற ஆபாச நிகழ்ச்சிகள் குறித்து கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “இது ஒரு தேசமாக நம்மை எங்கு கொண்டு செல்கிறது? இந்த நிகழ்ச்சியில் பெண்கள் ஆடைகளை கழற்றும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

இவர்கள் அனைத்தும் கேமரா முன் நடக்கிறது. இது ஒரு ஆபாச நிகழ்ச்சி என வரையறுக்கப்பட வேண்டாமா?” என கேள்வி எழுப்பினார். மேலும், “இது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உல்லு, ஆல்ட் பாலாஜி போன்ற OTT செயலிகளைத் தடை செய்ய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு நான் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் இன்னும் பதில் இல்லை,” என கூறினார்.

இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பிக் பாஸ் புகழ் எஜாஸ் கானுக்கு எதிராகவும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2023ல் மும்பையில் வெர்சோவா தொகுதியில் போட்டியிட்ட எஜாஸ் கானுக்கு, வெறும் 155 வாக்குகள் மட்டுமே கிடைத்ததாகவும், நாட்டின் அரசியல் மற்றும் ஊடக சூழலில் ‘விளையாட்டு’ நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடக்கும் ஆபாச நிகழ்வுகள் வேறொரு கலாசாரக் கடப்பாட்டின் எதிரொலியாக மாறி வருவதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.