இந்தியாவின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி புதிய வீட்டுக்கடன் விவரங்களை 8.45 சதவீதத்திலிருந்து 8.3 சதவீதமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த வசதியானது இந்த மாத இறுதிவரை வரையறுக்கப்பட்ட கால சலுகையாக செயலாக்க கட்டணங்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளது.

வங்கியின் போட்டியாளர் வங்கிகளை விட எஸ்பிஐ வங்கி 8.3% குறைந்த வட்டியை கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 8.3 சதவீதத்தில் 30 ஆண்டு கால வீட்டு கடனுக்கு ஒரு லட்சத்திற்கு மாதத்திற்கு 755 தொடக்கதில் இஎம்ஐ இருக்கும். இந்த சலுகை மார்ச் 31 வரை செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.