புத்திர கான் மாநிலத்தில் நடப்பு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த நபர்கள் வீட்டில் மினி பார்களை அமைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்க கலால் துறை அனுமதி அளித்துள்ளது. அதற்காக வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதற்கான உரிமம் பெற்றவர்கள் ஒன்பது லிட்டர் இந்திய தயாரிப்பு மதுபானம், 18 லிட்டர் வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஒன்பது லிட்டர் ஒய் மற்றும் 15.6 லிட்டர் பீர் ஆகியவற்றை வீட்டில் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மினி பார் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு வீட்டிலேயே தனிப்பட்ட மினி பார்களை அமைப்பதற்கு கலால் துறை அளித்த உத்தரவை தற்போது திரும்பப் பெற்றுள்ளது. அதன்படி மினிபர்களை அமைப்பதற்கான உரிமங்களை வழங்குவது தொடர்பாக களால் துறையின் கையேட்டின் விதிகள் மறு உத்தரவு வரும் வரை திரும்ப பெறப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே மினி பார் வைத்துள்ள நபர்கள் அனைவரும் இவற்றை அரசு அறிவிக்கும் வரை மூடி வைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.