
மத்திய அரசாங்கம் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள் .இந்த நிலையில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் விதமாக கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு சில விவசாய விவசாயிகள் இந்த கிரெடிட் கார்டை பெற்று அதன் மூலமாக கடன் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஏழு சதவீத வட்டியோடு 3 லட்சம் வரை உரிய காலத்தில் இந்த திட்டத்தில் கடன் கிடைக்கும். விவசாயிகள் எந்தவிதமான பாதுகாப்பு வைப்பு தொகையும் செலுத்த வேண்டியதில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை செலுத்தினால் 3 சதவீதம் வட்டி சலுகை கிடைக்கும். இது பிரதம மந்திரி பசில் பீமா யோஜனா திட்டத்தோடு இணைக்கப்பட்டது. இது குறித்த மேலும் விவரங்களை அருகில் உள்ள வங்கி கிளைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.