
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் பிரித்து கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெறும் விவசாயிகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஒன்றை செய்ய வேண்டும். இல்லையெனில் உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாது. 15வது தவணை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டுமானால், இந்த மாத இறுதிக்குள் நீங்கள் ஒன்றை செய்ய வேண்டும்.
KYC செயல்முறையை முடிக்க அரசு பல நாட்கள் அவகாசம் வழங்கியது. KYC முடிக்கப்படாவிட்டால், பணம் டெபாசிட் செய்யப்படுமா என்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. KYC-யை முடித்திருந்தால் பயப்பட வேண்டாம். இல்லையெனில் வங்கிக்குச் சென்று செப்டம்பர் 30க்குள் இதனை முடிக்கவும்.