
விவசாயிகளுக்கான மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான கிசான் கி பாத் என்ற திட்டம் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் விவசாயிகள் உரையாடலாம். விவசாயிகள் பெரும்பாலும் தகவல் இல்லாததால் பூச்சிக்கொல்லிகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதற்கு தீர்வுக்கான தான் இந்த திட்டம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.