
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொட்டாவூரில் சஞ்சீவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் விவசாய வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நிலத்திற்கு அருகே செய்யாற்றில் அதிக அளவு தண்ணீர் ஓடியது. இந்த நிலையில் சஞ்சீவிவின் மூன்று வயது குழந்தை திருசெல்வம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை ஆற்றில் இறங்கியதால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி குழந்தை திருசெல்வத்தின் உடலை மீட்டனர். பின்னர் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.