அறிமுக டைரக்டர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் சென்ற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் “போர் தொழில்”. இந்த படத்தில் சரத்குமார், நிகிலா விமல் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

இந்த நிலையில் போர் தொழில் படத்தை பாராட்டி நடிகர் அருண் விஜய் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதாவது “போர் தொழில்” காட்சிகள் அதிகமாகி இருக்கிறது. அனைத்து இடங்களிலும் ஹவுஸ்ஃபுல், வார விடுமுறை படத்திற்கு கூடுதல் பலம் ஆகும். பிரம்மாண்ட விளம்பரங்களை விட படத்தின் கதை தான் மிகவும் முக்கியமானது என தெளிவாக காட்டுகிறது. படக் குழுவுக்கு வாழ்த்துக்கள் என அவர்  பதிவிட்டுள்ளார்.