தமிழ் திரை உலகில் ரசிகர்களை நம்பி படம் எடுத்தது போய் சிலர் ott தளங்களை நம்பி படம் எடுக்கத் துவங்கி விட்டனர். இது 2020 ஆம் ஆண்டு தான் தொடங்கியுள்ளது.

எந்த பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் நான் நீ என்று போட்டி போட்டு வரும் OTT நிறுவனத்திடம் விற்பனை செய்து பாதி தொகையை OTT உரிமையில் மீண்டும் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் பல தயாரிப்பாளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது OTT நிறுவனங்கள் தங்களின் செயல்முறையை மாற்றிவிட்டது.

அதற்கு காரணமும் ரசிகர்கள் தான். பெரிய பெரிய நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் OTT தளங்களில் பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக நல்ல கதையம்சத்துடன் கூடிய சீரிஸ்கலையும் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களையும் ரசிகர்கள் தேர்ந்தெடுத்து பார்க்க துவங்கி விட்டனர்.

இதனால் OTT தளங்கள் பெரிய நடிகர்களின் படத்தை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டாமல் படத்தின் தயாரிப்பாளர்கள் தான் நிறுவனங்களை சென்று சந்திக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. விலையை நிர்ணயம் செய்யும் இடத்திலும் OTT நிறுவனம்தான் அங்கம் வகிக்கிறது.

இது குறித்து சித்ரா லக்ஷ்மணன் தனது பேட்டி ஒன்றில் தனுஷ் நடித்த படங்கள், சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம், தளபதி69 படம் என எதுவும் இதுவரை OTT தளத்தில் வியாபாரமாகவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிக்கலை கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.