இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த ஸ்ரீ தேவி கடந்த 1967-ல் கந்தன் கருணை எனும் தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் பல்வேறு படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இதையடுத்து தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 300-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 1996ம் வருடம் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீ தேவி. இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.

சென்ற 2018ல் ஸ்ரீதேவி துபாய் சென்றபோது பாத்ரூம் தொட்டிக்குள் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஸ்ரீ தேவியின் வாழ்கை வரலாறு குறித்து புத்தகம் வெளியாகயிருக்கிறது. இந்த புத்தகம் “ஸ்ரீதேவி- தி லைப் ஆப் எ லெஜண்ட்” எனும் பெயரில் வரவிருக்கிறது. இப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார் என அவரது கணவரும், தயாரிப்பாருமான போனிகபூர் தன் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த புத்தகம் நடப்பு ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.