
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், 2023-ல் நடந்த ஒரு அரசு விழாவில் நடிகை மவ்ரா ஹொசைனுக்கு விருது வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கவர்னர் ஹவுஸில் நடந்த நிகழ்வில், மவ்ராவுக்கு விருது வழங்கியபின், அவர் நடந்து செல்லும் போது பிரதமர் தவிர்க்க முடியாத பார்வையில் அவரைப் பார்த்தது வீடியோவில் தெளிவாக உள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி, பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த வீடியோ இரண்டாம் முறையாகச் செம்ம பரபரப்பை ஏற்படுத்தியதற்கு காரணம், சமீபத்தில் மவ்ரா ஹொசைன் இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை விமர்சித்ததால் மீண்டும் வைரலாகியுள்ளது. கடந்த 2016-ல் வெளியான Sanam Teri Kasam என்ற ஹிந்தி படத்தின் இரண்டாம் பாகத்தில் மவ்ராவுடன் நடிக்க முடியாது என்று அவரின் சகநடிகர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். இதையடுத்து, மவ்ரா நடித்திருந்த அந்தப் படத்தின் போஸ்டரில் இருந்து அவரது உருவம் இசை செயலிகளில் டிஜிட்டலாக நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Apparently Shehbaz Sharif is not that Sharif 😂😂 pic.twitter.com/RzzitJgJlI
— Cabinet Minister, Ministry of Memes,🇮🇳 (@memenist_) May 28, 2025