
துபாயில் 8 அணிகள் விளையாடும் 9-வது ஐசிசி சாம்பியன் டிராபி தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியுள்ளது. சமீப காலமாக பார்மில் இல்லாமல் தவித்து வந்த நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த தொடரிலாவது மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 38 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 22 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மீண்டும் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போதைய சூழலில் விராட் கோலி எப்படி விளையாட வேண்டும் என்று இந்தியாவில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அவருக்கு அறிவுரை மற்றும் எச்சரிக்கை வழங்கியுள்ளார் .அதாவது, “நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் எவ்வளவு சாதனையை செய்திருந்தாலும் ஒரு போட்டியில் ரன் குவிப்பதை விடாமல் நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் ஆட்டத்தை ரசிக்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
அதேபோன்று நீங்கள் ரன் அடிக்கும் போது அவர்கள் கொண்டாடுவார்கள்.சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கடும் நெருக்கடியை நீங்கள் சந்தித்து வருவதாக நான் உணர்கிறேன். இதிலிருந்து சில யுத்திகளை மாற்றிக்கொண்டு மீண்டும் சிறப்பாக ரன் குவிக்க இயல வேண்டும். மனதில் தேவையில்லாத சிந்தனைகளை நீக்கிவிட்டு சுதந்திரமாக ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். உங்களால் நிச்சயம் பிரகாசிக்க முடியும். இல்லையென்றால் மன அழுத்தத்தில் சிக்க வேண்டிய நிலையை சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.