பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது சில ரசிகர்கள் செய்த விஷயம் மிகவும் அத்துமீறியதாக அமைந்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் உள்ள மரியம்மனஹள்ளி கிராமத்தில் சில இளைஞர்கள் விராட் கோலி பேனர் முன்பாக ஆட்டை வெட்டி பலி கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி ஆட்டின் ரத்தத்தை விராட் கோலியின் பேனர் மீது ஊற்றி தெளித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தற்போது திப்பேசாமி, ஜெயண்ணா மற்றும் பாலய்யா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.