அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்வுக்கு வருகின்ற ஜூலை 7ஆம் தேதி முதல் ஜூலை 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 12ம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் 20 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் agnipathvayu.cdac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.