சேலம் மாவட்டம் காவேரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 18 வயது இளம்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த இளம்பெண்ணை கல்லீரல் மற்றும் ரத்த நாள சிகிச்சை நிபுணர்கள் சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதனையடுத்து எம்போலைசேஷன் சிகிச்சை மூலம் ரத்தக்கசிவு உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டு அந்த இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து கல்லீரல் பிரிவு தலைமை மருத்துவர் ரவிக்குமார், ரேடியாலஜி நிபுணர் மருத்துவர் சந்தோஷ்குமார் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து இளம்பெண்ணை காப்பாற்றி விட்டனர். தற்போது அந்த பெண் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினருக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.