
ஒலிம்பிக்கில் போட்டியில் வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். ஆனால் தற்போது இவர் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதால் போட்டியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில், பாஜக எம்.பி ஹேமமாலினி அதுதொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, இது மிகவும் ஆச்சரியமாகவும், விசித்திரமாகவும் இருக்கிறது. 100 கிராம் எடை கூடுதலாக இருக்கிறதுக்காகவா அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். பெண்கள், கலைஞர்கள் என எல்லாருக்கும் இது ஒரு பாடம். அவர் இந்த எடையை விரைவில் குறைப்பார் என்று நம்புகிறேன். ஆனாலும் அவரால் இனி போட்டியில் பங்கேற்க முடியாது என்று கூறினார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.