தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிப்புக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றை கலக்காமல் சிலைகளை தயாரிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை கொண்டு சிலைகளை தயாரித்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகளில் ஆபரணங்களை தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள் மற்றும் வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு ரசாயனம் கலந்த சாயங்களை பயன்படுத்தக் கூடாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விதிமுறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.