ரிசர்வ் வங்கியானது விதிமுறைகளை மீறியதற்காக ஐந்து கூட்டுறவு வங்கிகளின் மீதும் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டுறவு வங்கிகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி ஆனது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி குஜராத்தில் உள்ள ஐந்து கூட்டுறவு வங்கிகள் விதிகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் 50000 முதல் 5 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது. மற்ற வங்கிகளில் வைப்பு தொகையை வைத்திருப்பது மற்றும் வட்டியை மீறுவது  குறித்து வழிகாட்டுதல்களுக்கு இணங்க தவறியதற்காக வதோதராவின் ஸ்ரீ பாரத் சககாரி  வங்கிக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிகளின் மீது விதிக்கப்பட்ட அபராதமானது ஒழுங்குமுறைகளில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்று ஆர்பிஐ  தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி குஜராத்தின் சோட்டா உதய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்குடாவில் அமைந்துள்ளசங்கேதா நகரிக் கூட்டுறவு வங்கி மீதும் 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள புஜ் வணிக கூட்டுறவு வங்கிக்கு, KYC அறிவுறுத்தல்களுக்கு இணங்காததற்காக ரிசர்வ் வங்கி ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது.