மத்திய அரசாங்கம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் துவரம் பருப்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பதிவு, கொள்முதல் பணம் செலுத்துவதற்காக கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு நிறுவனம் இணைந்து ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுதுறை அமைச்சருமான அமித்ஷா தொடங்கி வைத்துள்ளார்.

பருப்பு வகைகளில் தற்சார்பு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு உதவும் விதமாக இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் நாட்களில் வேளாண் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கான தொடக்கம் தான் இது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.