
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அலி ராஜ்பூர் மாவட்டத்தில் நவம்பர் 14ஆம் தேதி பழங்குடியின நபரையும் அதனை தடுக்கும் என்ற விதவைப் பெண்ணையும் கிராம மக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணின் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அந்த பெண்ணுக்கு கிராம மக்கள் யாருமே உதவி செய்யவில்லை. அப்போது ஒரு பழங்குடியின நபர்(48) தான் அந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து அவரது குழந்தைகளை வளர்க்க உதவி செய்துள்ளார்.
இந்த நிலையில் அந்த நபர் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கிராம மக்கள் அவரை நிர்வாணப்படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வேண்டும் அந்த பெண்ணையும் தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படமும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.