விண்வெளி ஆராய்ச்சியில் மனிதன் எத்தனை எத்தனையோ புது புது  விஷயங்களை கண்டுபிடித்திருந்தாலும், அது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. விண்வெளிப் பயணம் எவ்வளவுதான் சுவாரஸ்யமாக் இருந்தாலும்  அந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள் மிக முக்கியம். இந்நிலையில்  விண்வெளியில் வீரர்கள் ஏன் நடக்க முடியாது என்பதற்கான கரணம் தெரியுமா? அதாவது விண்வெளியில் மைக்ரோ ஈர்ப்பு விசையின் வளிமண்டலம் உள்ளது. அதாவது விண்வெளி வீரர்கள் பூமியை விட 89 % குறைவான ஈர்ப்பு விசையில் அங்கு இருப்பார்கள்.

இதன் காரணமாக அவர்கள் எப்போதும் எடை இல்லாத நிலையை உணர்கிறார்கள். இந்த நிலை சர்வதேச விண்வெளி நிலையத்திலும் ஏற்படுகிறது. அதனால் விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் எப்போதுமே மிதந்தபடிதான் நகர முடியும். விண்வெளியில் நடக்கும் போது அழுத்தம் கிட்டதட்ட நீச்சல் குளத்தில் கனமான உடைகளை அணிந்து கொண்டு நடப்பதை போன்ற ஒன்று. இதனாலேயேவிண்வெளி வீரர்களுக்கு நீச்சல் குளத்தில் தரை தளத்தில் நடக்க பயிற்சி கொடுக்கிறார்கள். இதனால், அவர்களால் நடக்க முடியாது.