
சின்னத்திரையில் நுழைந்து ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்டவர்தான் விஜே சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் கவர்ந்தவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சித்ராவின் தற்கொலை வழக்கில் அவருடைய கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் கைதான ஹேம்நாத் உள்ளிட்ட ஏழு பேரை இன்று நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் போது ஹேம்நாத்துக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். இதனை தொடர்ந்து சித்ரா இறப்புக்கு பின்னால் உள்ள மர்மத்திற்கு விடை தெரியாமலேயே போய்விட்டதாக ரசிகர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.