கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனியா இஸ்லாமிய ஜிகாத் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 1400 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில் 200 பேர் பணய கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர். இதனிடையே பல நாடுகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரண்டு இஸ்ரேலியர்களையும் இரண்டாம் அமெரிக்கர்களையும் ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது. அதேபோன்று எகிப்தில் இருந்து காசாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவி பொருட்கள் குறைந்த அளவிலேயே மக்களுக்கு கிடைக்கப்பெறுகிறது.

இதனால் அதிக அளவு உதவி பொருட்கள் கிடைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பல தரப்பினர் இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் பணய கைதிகளை விடுவிக்குமாறும் அதிக அளவு மனிதாபிமான உதவி பொருட்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.