
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தாத்தா மற்றும் தந்தையைப் போல சினிமாவில் என்ட்ரி கொடுத்து விட்டார். ஆனால் ஹீரோவாக அல்லாமல் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்க உள்ள முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கூறுகின்றனர்.

மேலும் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் நடிகர் சூரியிடமும் கதை கூறியுள்ளாராம் ஜேசன் சஞ்சய். இந்நிலையில் சூரி இது தனக்கு சரியாக இருக்காது, இது மாஸ் ஹீரோக்களுக்கு தான் சரியாக இருக்கும் எனக் கூறி மறுப்பு தெரிவித்து விட்டாராம்.